search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜப்பான் மழை"

    36 ஆண்டுகளுக்கு பிறகு மிக பலத்த மழை பெய்து வருவதால் ஜப்பானில் பெரும் பகுதி வெள்ளத்தில் மூழ்கி கிடக்கிறது. இதனால் இதுவரை 86 லட்சம் பொதுமக்கள் வெளியேறி உள்ளனர்.
    டோக்கியோ:

    ஜப்பான் நாட்டில் 1982-ம் ஆண்டு பலத்த மழை பெய்து, அதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் கடும் சேதம் ஏற்பட்டது.

    அதேபோல் 36ஆண்டுகளுக்கு பிறகு இப்போதும் அங்கு மிக பலத்த மழை கொட்டுகிறது. இதனால் ஜப்பானில் பெரும் பகுதி வெள்ளத்தில் மூழ்கி கிடக்கிறது.

    ஒகாயமா, ஹிரோஷிமா, யாமாகுச்சி பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதில், ஒகாயமா பகுதி முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    பெரும்பாலான இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து இருக்கிறது. பல வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன.

    இதனால் மக்கள் அங்கு வசிக்க முடியாமல் வெளியேறி வருகிறார்கள். இதுவரை 86 லட்சம் பேர் வெளியேறி உள்ளனர். அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


    வெள்ள நிலைமை தொடர்ந்து மோசமாகி வருகிறது. பெரும்பாலான சாலைகளை வெள்ளம் அடித்து சென்று விட்டது. மேலும் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டும் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

    இதனால் போக்குவரத்து முற்றிலும் முடங்கி உள்ளது. மின் கம்பங்களும் சாய்ந்து விட்டன. இதன் காரணமாக பல பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருக்கிறது.

    வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக மீட்பு படையினர், ராணுவத்தினர் 70 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். சாலைகள் துண்டிக்கப்பட்டு இருப்பதால் மீட்பு பணி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    மழைக்கு இதுவரை 249 பேர் பலியாகி இருக்கிறார்கள். ஏராளமானவர்களை காணவில்லை. அவர்களும் பலியாகி இருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

    வெள்ள நிலைமை மிக மோசமாக இருப்பதால் பிரதமர் ஷின்சோ அபே தனது வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்துள்ளார். அவர், பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு நிவாரண பணிகளை முடுக்கி விட்டுள்ளார்.  #Japanfloods #JapanRain
    ஜப்பான் நாட்டின் தென்மேற்கு பகுதியில் கடந்த இருநாட்களாக கொட்டித் தீர்த்த தொடர் மழை மற்றும் வெள்ளம் சார்ந்த விபத்துகளில் பலியானோர் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.
    டோக்கியோ:

    ஜப்பான் நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஹிரோஷிமா, கியாட்டோ, ஒக்காயாமா, எஹிமே உள்ளிட்ட மாகாணங்களில் கடந்த 48 மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது.

    மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு நீர்நிலைகளை மீறி கடந்து சென்று பல பகுதிகளை குளம்போல் சூழ்ந்துள்ளது. கார்கள், பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் தண்ணீருக்குள் மூழ்கி கிடக்கின்றன.

    சில இடங்களில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் 16 அடி உயரம்வரை நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தாழ்வான பகுதிகளில் வசித்துவந்த சுமார் 50 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    வெள்ளத்தில் மூழ்கியும், நிலச்சரிவுக்குள் சிக்கியும் பலியானோர் எண்ணிக்கை இன்று 38 ஆக உயர்ந்துள்ளது. காணாமல் போன சுமார் 50 பேரை தேடும் பணிகளில் ராணுவம் மற்றும் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.


    வெள்ளம் சூழ்ந்த குடியிருப்பு பகுதிகளில் மீட்பு குழுவினரின் ஹெலிகாப்டர் சேவையை எதிர்பார்த்து ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீட்டு கூரைகளின்மேல் அமர்ந்தவாறு வானத்தை உற்று நோக்கியவாறு காத்திருப்பதை காண முடிவதாக ஜப்பான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. #rainhitsJapan
    ×